வவுனியா நெளுக்குளம் தொழிநுட்பக் கல்லூரியில் மாபெரும் கல்விக் கண்காட்சி!!

1744


வவுனியா நெளுக்குளம் தொழிநுட்பக் கல்லூரியின் கல்விக் கண்காட்சி தொழிநுட்பக்கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் அதிபர் ஆ.நற்குணேஸ்வரன் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (30.11.2023) காலை 9.00 மணி தொடக்கம் 2.00 மணிவரை இடம்பெற்றது.இக் கல்விக் கண்காட்சியில் 05க்கு மேற்பட்ட பாடசாலைகளிலிருந்து கல்விப் பொது சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்கள் உட்பட 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இக் கண்காட்சியில் குழாய் இணைப்பு பொறியியல் பிரிவு, சுருக்கெழுத்து மற்றும் தட்டடெழுத்துப்பிரிவு, வர்த்தகப்பிரிவு, எந்திரவியல் பிரிவு, வாகனம் திருத்தும் பிரிவு, இலத்திரனியல் பிரிவு, குளிரூட்டல் மற்றும் வளிச்சீராக்கல் பிரிவு போன்ற பல்வேறு காட்சிக் கூடங்கள் தொழிநுட்ப கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தன.


இக் கண்காட்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களால் செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தது.