வவுனியாவில் விமானப்படை தளத்தினை காணொளி எடுத்த 18 வயது இளைஞன் கைது!!

2442

வடக்கிற்கு விஐயம் மேற்கொண்ட ஐனாதிபதி வவுனியாவிற்கு இன்று (05.01.2024) விஐயம் மேற்கொண்ட நிலையில் வவுனியா விமானப்படை தளத்தில் ஜனாதிபதி விசேட விமானத்தில் வருகை தந்து வன்னி அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் பாதுகாப்பு வாகனத்தொடரணி ஏற்பாடுகளை கண்டிருந்த நிலையில் அதனை இளைஞரொருவர் புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமையினை அவதானித்த விமானப்படைத்தள பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் குறித்த இளைஞனை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இளைஞன் பூனாவ பகுதியை சேர்ந்த 18வயதுடையவராவர். இவரிடம் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.