வவுனியா சுந்தரபுரத்தில் வயோதிபரின் சடலம் மீட்பு

252


dead

வவுனியா, சுந்தரபுரம் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பாங்கான பகுதியில் உருக்குலைந்த நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் மீட்டுள்ளனர்.வவுனியா, சுந்தரபுரம் காட்டுப்பகுதியில் சடலம் ஒன்றைக் கண்ட கிராமவாசிகள்  பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து இந்தச் சடலத்தை மீட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

4ஆம் வட்டாரம் சுந்தரபுரத்தைச் சேர்ந்த ஜேமிஸ் ஜேசுதாசன் (வயது 63) என்பவரின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்ட நபர்  கடந்த வாரம் வீட்டில் முரண்பட்டுக்;கொண்டு சென்றிருந்ததாக விசாரணையிலிருந்து தெரியவருவதாகவும் பொலிஸார் கூறினர்.சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான விசாரணையை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.