வவுனியாவில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்து : படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி!!

2793

வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் நேற்று (06.04.2024) காலை 10.30 மணியளவில் புகையிரத்துடன் பிக்கப் ரக வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வவுனியா ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதம் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் புகையிரதக் கடவையினை கடக்க முயன்ற பிக்கப் ரக வாகனம் புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் பிக்கப் ரக வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மன்னார் நானாட்டன் பகுதியினை சேர்ந்த 32 வயதுடைய ராஜன் நிரோஜன் என்பரே உயிரிழந்தவராவர். புளியங்குளம் பொலிஸார் விபத்துச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.