உலகமே பார்வையிட்ட அரியவகை சூரியக் கிரகணக் காட்சி!!

362

வடக்கு அமெரிக்காவை நேற்று (08.04.2024) கடந்து சென்ற பூரண சூரிய கிரகணத்தை மில்லியன் கணக்கான மக்கள் கண்டு களித்துள்ளனர்.

பூமிக்கும் சூரியனுக்கு நடுவிலான பாதையில் சந்திரன் பயணித்து, பூமியின் பார்வையிலிருந்து சூரியனை முழுமையாக மறைக்கும் போது பூரண சூரிய கிரகணம் ஏற்படுகின்றது.

ஐக்கிய அமெரிக்காவில் வசிக்கும் 32 மில்லியன் அளவிலான மக்கள் நேற்று ஏற்பட்ட இந்த பூரண சூரிய கிரகணத்தை முழுமையாகவும் ஏனையோர் பகுதியளிவிலும் காணக்கூடியதாக இருந்துள்ளது.

இந்நிலையில், பெருமளவிலான மக்கள், பூரண சூரிய கிரகணத்தை முழுமையாக பார்ப்பதற்காக குறிப்பிட்ட பகுதிகளில் ஒன்றுகூடியுள்ளனர்.

அத்துடன், அமெரிக்க நாட்டில் இது போன்றதொரு அரிய சூரிய கிரகணம் மீண்டும் 2044ஆம் ஆண்டளவிலேயே ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.