வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் உயர்தரப் பரீட்சையில் சாதனை!!

4771

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் வெளிவந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கணித பிரிவில் முதல் 10 இடத்தில் 8 இடங்களை தம் வசப்படுத்தியுள்ளது.

இதில் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஆறாம், ஏழாம், ஒன்பதாம், பத்தாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளதோடு முதலாம் இடத்தினை ஆ.ஜிலோட்சன் என்ற மாணவன் பெற்றுள்ளார்.

இதேவேளை, விஞ்ஞான பிரிவில் பத்து இடங்களில் மூன்று இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளார்கள். இதில் ஆறாம், ஏழாம், எட்டாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளனர்.

இதேவேளை ஈ டெக்கில் முதலாம், மூன்றாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளதோடு முதலாம் இடத்தினை கமலநாதன் லோகநாதன் பெற்றுள்ளார்.

பி டெக்கில் 7 ஆம் இடத்தினையும் வர்த்தக பிரிவில் முதல் 10 இடத்தில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் இடங்களை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.