வவுனியாவில் விஞ்ஞான பிரிவில் இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலயம் முன்னிலை!!

3107

வெளியாகிய உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் விஞ்ஞானப் பிரிவில் இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முன்னிலை பெற்றுள்ளனர்.

அந்தவகையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் நான்கு மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன், மாவட்ட மட்டத்தில் 1,2,3,5 ஆம் நிலைகளை பெற்றுள்ளனர். அத்துடன் 8 மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் 20 நிலைக்குள் சித்தியடைந்துள்ளனர்.

வர்த்தகப் பிரிவில் 4 மாணவர்கள் 3 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன் ஒரு மாணவி மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தினை பெற்றுள்ளார். அத்துடன் 4 மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதல் 20 நிலைக்குள் சித்திபெற்றுள்ளனர்.

கணிதப் பிரிவில் ஒரு மாணவி 3 பாடங்களிலும் ஆ சித்திகளை பெற்றுள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் 5ம் நிலையினை பெற்றுள்ளார். அத்துடன் 6 மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதல் 20 நிலைக்குள் சித்தியடைந்துள்ளனர்.

கலைப்பிரிவில் ஒரு மாணவி 3 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 23 ஆம் நிலையினை அடைந்துள்ளார். தொழில்நுட்ப பாடத்தில் மாவட்ட மட்டத்தில் 9 ம் நிலையினை ஒரு மாணவி பெற்றுள்ளார்.