ஹம்பாந்தோட்டையில் தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிப்பிக்குளம பகுதியில் நேற்று மாலை (05) பாடசாலை மாணவர் ஒருவர், மற்றுமொரு பாடசாலை மாணவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை, பெத்தேவெல பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார். மேலதிக வகுப்பிற்காக சென்ற வேளையில், இரண்டு மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், மாணவனின் மரணம் தொடர்பில் 17 வயதுடைய பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.