வவுனியாவின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு நில அதிர்வுகள்!!

1888

வவுனியாவின் பல்வேறு இடங்களில் நேற்று (18.06.2024) இரவு 11 மணியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

பெரியளவில் அதிர்வுகளை உருவாக்காத மெல்லிய அதிர்வாகவே இதைக் கருதவேண்டியுள்ளதாக சர்வதேச நில அதிர்வுகளை ஆராய்ந்து பதிவிடும் மையமான Volcana Discovery தெரிவிக்கிறது.

மேலும் இலங்கை நேரம் இரவு 11.02 மணியளவில் குறித்த நில அதிர்வு என உணரப்படும் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் வவுனியா மாவட்டத்தின் வடமேற்கு பகுதியின் 5 சதுரகிலோமீற்றர் பரப்பளவில் அதிர்வுகளை அதிகமாக உணரக்கூடியிருந்திதாகவும் Volcana Discovery தெரிவித்துள்ளது.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம்

வவுனியாவை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு பதிவாகி உள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

மஹகனந்தராவ, ஹக்மன மற்றும் பல்லேகலை நில அதிர்வு நிலையங்களில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.