நான் பைத்தியக்கார காதலன்.. ஸ்டேட்டஸ் வைத்து விட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

325

தன்னுடைய அண்ணியின் தங்கையைக் காதலித்து திருமணம் செய்ய விரும்பிய இளைஞர் ஒருவர், காதல் தோல்வியால், ‘நான் பைத்தியக்கார காதலன்’ என்று வாட்ஸ்-அப் பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசாகூர் தாலுகாவில் முட்கல் நகர் அருகே உள்ள கனசவி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்(22). இவர் தனது சொந்த அண்ணியின் தங்கையை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளவும் விரும்பிய நிலையில், சந்தோஷின் காதலை அந்த பெண் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனஉளைச்சலில் இருந்த சந்தோஷ், வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், நான் ஒரு பைத்தியக்கார காதலன் என்பதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்ற தனது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த முட்கல் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று, சந்தோஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.