எஸ்.பி அலுவலகத்தில் மனைவியைக் குத்திக் கொலை செய்த போலீஸ்காரர்!!

126

மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த தனது மனைவியை அனைவரின் முன்னிலையிலும் போலீஸ்காரர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் சாந்திகிராமத்தைச் சேர்ந்தவர் லோக்நாத். இவர் ஹாசன் நகர் காவல் நிலையத்தில் காவலராக லோக்நாத் பணியாற்றி வந்தார். இவருக்கும் மம்தாவிற்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

லோக்நாத்திற்கும், மம்தாவிற்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக அவர்களுக்குள் மோதல் இருந்துள்ளது.

இந்த நிலையில் தனது கணவர் லோக்நாத் மீது புகார் அளிக்க ஹாசன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மம்தா இன்று வந்தார். அப்போது அங்கு வந்த அவரது கணவர் லோக்நாத், மம்தாவிடம் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால், தனது மம்தாவை சரமாரியாக குத்தினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனைவரின் முன்னிலையிலும் பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரத்த வெள்ளத்தில் மம்தா சரிந்து விழுகவும், லோக்நாத் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

அங்கிருந்த காவலர்கள், மம்தாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மம்தா அங்கு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஹாசன் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லோக்நாத்தை தேடி வருகின்றனர்.

மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனைவரின் கண் முன்னே மனைவியை அவரது கணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.