ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் புதிய வகை மீனொன்றினை பிடித்து வந்துள்ள சம்பவமொன்று வாழைச்சேனையில் நேற்று இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை வாவியிலிருந்து ஐம்பது கிலோ மீற்றர் தூரத்தில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற அந்த பகுதியைச் சேர்ந்த முஹைதீன் பாவா நிஸார் என்பவரின் படகில் சென்றவர்களே புதிய வகை மீனைப் பிடித்து வந்துள்ளனர்.
கறுப்பும், சாம்பல் நிறமும் கலந்த நிறத்திலுள்ள மீன் 7.5 கிலோ கிராம் எடையும், நான்கு அடி நீளமும் கொண்டதாக காணப்படுகிறது.
இந்த புதிய வகை மீன் பிடிபட்டுள்ளதாக பிரதேச கடற்றொழில் பரிசோதகருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், அவர்கள் மீனைப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லவுள்ளதாகவும் படகின் உரிமையாளர் முஹைதீன் பாவா நிஸார் தெரிவித்தார்.






