கொழும்பு- பளை ரயிலிலிருந்து தவறி விழுந்து இளைஞன் பலி!!

946

Train

கொழும்பிலிருந்து பளையை நோக்கி வந்த ரயிலிலிருந்து தவறி விழுந்து 19 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரயிலில் இருந்து தவறிவீழ்ந்து பாலமொன்றின் மீது மோதுண்டு இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள உறவினர் வீடொன்றிற்கு வருகைதந்து, மீண்டும் திரும்பி வரும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.