வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் மீட்க்கப்பட்ட சடலம்!!

2920

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தலவாக்கலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த பதில் நீதிவான் தி.திருவருள் சடலத்தினை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.