யாழ்ப்பாணத்துக்கு மலேசியாவின் உதவியுடன் சூரிய, காற்றாலை மின்சாரம்!!

1943

Kaatralai

மலேசிய அரசாங்கத்தின் தெனகா நாசனல் என்ற நிறுவனம் இலங்கையில் சூரியகதிர் மற்றும் காற்றாலை சக்தி மின்சார திட்டங்களுக்காக இலங்கையில் முதலீடு செய்யவுள்ளது. இதற்கான உடன்படிக்கை இலங்கை அரசாங்கத்துடன் அண்மையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மலேசிய நிறுவனம் யாழ்ப்பாணத்தில் தமது முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளது. மலேசியாவின் பாரிய நிறுவனங்களில் ஒன்றான தெனகா நாசனல் இந்த திட்டத்தின் மூலம் 35 மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்திசெய்ய எதிர்ப்பார்க்கிறது.