வடக்கில் 400 பாடசாலைகளில் 80க்கும் குறைவான பிள்ளைகள்!!

643

School

வடக்கில் உள்ள 400 பாடசாலைகளில் 80 க்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்பதாக வடக்கு மாகாண கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இவற்றில் 162 பாடசாலைகளில் 50 முதல் 80 வரையான மாணவர்கள் பயில்வதுடன் 250 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் 50க்கும் குறைவான மாணவர்களே கற்பதாக கூறப்படுகிறது.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் பல முறை மக்கள் இடம்பெயர்ந்ததன் காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளது. மாணவர்களின் எண்ணிகை குறைவாக இருப்பதால், ஆசிரியர்களின் விகிதாசாரத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.