50 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தவரது எலும்புகள் மீட்பு!!

855

bone

பல்லம, திம்பிரகொல்ல பிரதேசத்தில் இருந்து மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன. பிரதேசவாசி ஒருவரால் வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து காட்டுப் பகுதி ஒன்றிலிருந்து இந்த எலும்புகள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த எலும்புகள் பல வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஒருவருடையது என பொலிஸார் குறிப்பிட்டனர். இற்றைக்கு 50, 60 வருடங்களுக்கு முன்னர் குறித்த பிரதேசத்தில் பரவிய நோய் காரணமாக பலர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த எலும்பு தொகுதிகளுக்கும் அவ்வாறு உயிரிழந்தவருடையதாக இருக்க கூடும் என பொலிஸார் சந்கேம் வெளியிட்டுள்ளனர்.

எலும்புகள் மீட்கப்பட்ட பிரதேசத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள அதேவேளை பள்ளம பொலிஸார் இவ்விடயம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.