இத்தாலிக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ். இளைஞனிடம் பணம் மோசடி!!

561

S

இத்தாலிக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ். இளைஞனிடம் பணம் மோசடி செய்த நபரைக் கைது செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த 28 வயது இளைஞன், இத்தாலி செல்வதற்காக கொழும்பு 7ஐ சேர்ந்த ஒருவரிடம் 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். குறித்த நபர் இளைஞனை இத்தாலிக்கு அனுப்புவதாகக் கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

இதனையடுத்து பணத்தைக் கொடுத்த இளைஞன் கடந்த 22ஆம் திகதி காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கு மீதான விசாரணை நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பணமோசடி செய்த சந்தேகநபரைக் கைது செய்யுமாறு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன், காங்கேசன்துறைப் பொலிஸாரிற்கு உத்தரவிட்டார்.