சென்னை இலங்கைத் துணை தூதரகம் அருகே முற்றுகை போராட்டம்!!

717

இலங்கை பாதுகாப்பு துறையின் இணைய தளத்தில் வெளியான கட்டுரையில், முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடிக்கு மீனவர் பிரச்சினை தொடர்பாக கடிதம் எழுதுவது குறித்து அவதூறான கருத்துக்களுடன் சித்திரம் வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. நேற்று சென்னையில் அ.தி. மு.க.வினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கட்சியின் நிறுவனர் வேல்முருகன் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.எஸ். சண்முகம், வை.காவேரி, துணை பொதுச் செயலாளர் சத்ரியன் து.வெ. வேணுகோபால், பொருளாளர் அக்ரம்கான், தலைமை நிலைய செயலாளர் கண்ணன், தொழிற் சங்க தலைவர் சைதை சிவராமன், விருகை வீரராகவன், முத்துராஜ், தேவராஜ்.

திருவள்ளூர் செந்தில்குமார், மகளிரணி வெள்ளையம்மாள், உள்பட ஏராளமான நிர்வாகிகள் இலங்கை அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இலங்கை துணை தூதரகத்தையும் முற்றுகையிட முயன்றனர். ஆனால் பாதுகாப்பு கருதி பொலிசார் தடுத்து நிறுத்தினார்கள்.

அப்போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உருவ பொம்மைகளையும், இலங்கை நாட்டு கொடியையும் தீயிட்டு கொளுத்தினர்.

1 2