
பொலன்னறுவை – உதாகலகம – கலஹாகல பிரதேசத்தில் மகனொருவரால் தாக்கப்பட்ட தந்தை உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை ஏற்பட்ட குடும்பத் தகறாறு காரணமாக, பொல்லால் மகனொருவர் தனது 65 வயதான தந்தையைத் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை தந்தை பலியாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் சந்தேகநபர் போதையில் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




