
பொகவந்தலாவ – பொகவான தோட்டத்தில் பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறபடும் சந்தேகநபரை நேற்று கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இடம்பெற்று சுமார் ஒருமாதங்கள் கடந்த பிறகு நேற்றைய தினம் குறித்த சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து அவர்கள் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய ஒருவரேயே கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியை பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, சந்தேநபரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.





