நல்லூர் கந்தனுக்கு ஹெலியிலிருந்து மலர் தூவ தடை!!

580

Nalloor

நல்லூர் கந்தன் வருடாந்த உற்சவத்தின் போது ஹெலிஹப்டரில் இருந்து மலர் தூவுவது வழமை. ஆனால் இம்முறை இந்த வழக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நல்லூர்க் கந்தனின் மகோற்சவத்தின் தேர்த் திருவிழா அன்று யாழ். மாவட்ட கட்டளைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஹெலியில் இருந்து மலர் தூவி வழிபாடு செய்வது வழக்கம்.

இம்முறை ஹெலியில் இருந்து மலர் தூவி வழிபாடு செய்யும் முறை நிறுத்தப்பட்டுள்ளது என ஆலயத்தினர் அறிவித்துள்ளனர்.

இவ்வாறான செயற்பாடுகளினால் பக்தர்களின் மனங்களில் கவனக் குறைவு ஏற்படுகின்றது. இதனால் ஆலயத்தினர் இம்முறையும் எதிர்வரும் காலங்களிலும் ஹெலியில் இருந்து மலர் தூவி வழிபாடு செய்வதனை நிறுத்திக் கொண்டுள்ளனர்.

இந்த முடிவின் படி யாழ் கட்டளைத் தளபதி உதயப்பெரேராவுடன் ஆலயத்தினர் பேச்சுக்களை நடாத்தியுள்ளனர்.