
தமிழகத்தில் எழுந்துள்ள இலங்கை எதிர்ப்பு அலையை அடுத்து அங்கு சென்றுள்ள இலங்கையர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்கீழ் பீஹார் புத்தகாயாவில் இருந்து சென்னை வழியாக இலங்கை திரும்பிய 250 இலங்கையர்களுக்கு நேற்று முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டது.
பீஹாரில் இருந்து ரயிலில் இரண்டு பிரிவுகளாக சென்னைக்கு சென்ற இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இலங்கை அடியார்களில் பௌத்த பிக்குகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாதுகாப்பு கருதி நேற்று சென்னைக்கு சென்ற இலங்கையின் 15வயதுக்குட்பட்ட கிரிக்கட் அணியினர் திருப்பியனுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





