
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜைகள் 36 பேர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவை இவ் விடயம் குறித்து கவலை வெளியிட்டுள்ளது. இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்களில் பல பெண்களும் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் பிரஜைகளை கைது செய்வதற்கான விசாரணைகளை குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை நாடுகடத்துவதற்கான நடவடிக்கையை இலங்கை அரசு முன்னெடுத்தது. எனினும் இந்நடவடிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் பேரவை கவலை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் பேரவை மேற்கொள்ள தவறி விட்டதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.
இதேவேளை பாகிஸ்தான் பிரஜைகள் 205 பேர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் அகதிகள் கைது செய்யப்பட்டு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவை குறிப்பிட்டுள்ளது.





