உலகை அச்சுறுத்தும் எபோலா வைரஸ் இலங்கைக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை!!

597

ebola

உயிர்கொல்லி நோயான எபோலா வைரஸ் தற்பொழுது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் உயிர்கொல்லி நோயான எபோலா வைரஸ் இலங்கைக்குள் நுழைவது மற்றும் பரவுவதைத் தடுக்க விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நோய்க்கென விசேட மருத்துவ குழுக்கள், சுகாதாரப் பிரிவினர் விமான நிலையங்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி உலகில் 887 பேர் இந்த வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த உயிர் கொல்லி நோய் உலகின் மேற்கு ஆபிரிக்க நாடுகளான கினியா, சியாராலியோன், நைஜீரியா மற்றும் லைபீரியாவில் மிக வேகமாகப் பரவிவருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கணக்கெடுப்புப்படி 1976 இல் கொங்கோவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 280 பேர் பலியாகினர் என்றும், அதிகப்படியாகக் கொங்கோவிலேயே இந்த வைரஸ் தாக்கம் இருந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபிரிக்க நாடுகளை தாக்கி வந்த இந்த வைரஸ் தற்பொழுது உலக நாடுகளுக்கும் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.