வவுனியா சகாயமாதாபுரத்தில் நவகிரகங்களுடன் கூடிய துர்க்கையம்மன் கோவில் ஆடிச் செவ்வாய் உற்சவம்!!(படங்கள்)

625

வவுனியா மாவட்டத்தில் மூலஸ்தானத்தில் துர்க்கை அம்பிகை எழுந்தருளியாக அமையபெற்ற ஒரேயொரு துர்க்கையம்மன் ஆலயம் சகாய மாதபுரத்தில் அமைந்திருக்கின்றது.

இலங்கையின் வடபால் நவகிரகங்களுடன் அமையபெற்ற துர்க்கையம்மன் அம்மன் ஆலயங்களில் இதுவும் ஒன்றாக அமைந்திருக்கின்றது. செவ்வாய் கிழமைகளில் இராகு காலங்களில் இடம்பெறும் துர்க்கை வழிபாடு இங்கு ஒவ்வொரு வாரமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் ஆடிசெவ்வாய் கிழமையான நேற்று இடம்பெற்ற பூசை வழிபாடுகளின் சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு வவுனியா இணையம் வாயிலாக.. அத்துடன் பெருமளவான செவ்வாய் மற்றும் நக்கிரக தோசமுடையவர்கள் பெருமளவில் தங்கள் தோஷ நிவர்த்திக்காக அர்ச்சனைகள் மற்றும் விளக்குகளை ஏற்றி வழிபடுகின்றமை சிறப்பம்சமாகும்.

நேற்று மதியத்துக்கு பின் இரண்டுமணியளவில் அபிசேகங்கள் ஆரம்பமாகி மாலை 3.00மணி தொடக்கம் 4.30 மணிவரையிலான இராகு காலத்தில் துர்கை அம்மனுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் பெருமளவான பக்தர்கள் தாமும் துர்கை அம்மனுக்கு இராகு காலத்தில் தேசிக்காயில் நெய் ஊற்றி விளக்குகள் வைத்து வழிபட்டனர். மீண்டும் மாலை ஆறு மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்று துர்கை அம்பாள் உள்வீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது .

-கஜேந்திரன்-

2 3 4 5 6