வவுனியா மாவட்டத்தில் புதிய குடியேற்றங்கள் எங்கிருந்து வந்தன : செல்வம் அடைக்கலநாதன்!!

729

Selvam

வவுனியா மாவட்டத்தில் புதிய குடியேற்றங்கள் எங்கிருந்து வந்தன என எமக்கு உடன் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேட்டுக்கொண்டார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் திங்கட்கிழமை (04.08), வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்ட கேள்வியை எழுப்பினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

வவுனியா மாவட்டத்தில் பல சிங்கள குடியேற்றங்கள் புதிது புதிதாக வருகின்றன. இவை எங்குள்ள மக்களை குடியேற்றம் செய்கின்றார்கள் என்பது எமக்கு தெரிந்தாக வேண்டும். அதற்கு அரசாங்க அதிபர் பதிலளிக்க வேண்டிய தேவையுள்ளது.

இவ்வாறு குடியேற்றம் செய்யப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுவதுடன் யானைகள் வருவதாக பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்படுகின்றன.

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த எமது மக்களின் பிரதேசத்தில் யானைகள் புகுந்து அட்காசம் புரிகின்றது. அவர்களுக்கு பாதுகாப்பு வேலிகள் இதுவரை அமைக்கப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட வட மாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின, இங்கு குடியேறும் மக்கள் 1983ஆம் ஆண்டுப் பகுதியில் இங்கிருந்து வெளியேறியவர்களே என தெரிவித்தார்.

இதனையடுத்து சபையில் அமளி ஏற்பட்டது. செனவிரதனவின்; கருத்து தவறு என தெரிவிக்கப்பட்டதுடன் இது தொடர்பான ழுமையான விபரத்தை தாருங்கள் என அவரிடம் செல்வம் எம்.பி கேட்டார்.