
புதிய கல்வி ஆண்டிற்காக பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் 2013 கா.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் செப்டம்பர் 7ம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
இதற்கு முன்னதாக வெட்டுப்புள்ளிகளை வெளியிடவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. அத்துடன் புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ளது.





