பரீட்சையின் போது மயங்கி விழுந்த கிளிநொச்சி மாணவி!!

691

Exam

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவியொருவர் இன்று பரீட்சை மண்டபத்தினுள் மயங்கி விழுந்த சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இன்று காலை கணிதப் பிரிவில் எழுதிக் கொண்டிருந்த மாணவியே திடீரென மயங்கி வீழ்ந்தார்.

சம்பவத்தினையடுத்து, குறித்த மாணவி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த மாணவி இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற ஷெல் வீச்சினால் படுகாயமடைந்துள்ளார்.

இதனால் வெடித்த ஷெல்லின் சன்னம் ஒன்று மாணவியின் தலைப் பகுதியில் இன்னும் இருப்பதாகவும் இதனாலே இவருக்கு திடீரென மயக்கம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இன்று பரீட்சை எழுதும் போதும் அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் முழுமையாகப் பரீட்சை எழுதமுடியாத பரிதாப நிலை எற்பட்டுள்ளது.