நடு வீதியில் காதலியை கத்தியால் சரமாரியாக குத்திய காதலன் கைது!!

814

Knif

கொழும்பு அருங்காட்சியகத்திற்கு அருகில் இளம்பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். 22 வயதான குறித்த பெண் பலத்த காயங்களுடன் சற்று முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கத்திக்குத்துக்கு இலக்கான பெண்ணின் காதலன் எனக் கூறப்படும் 23 வயதான இளைஞர் ஒருவர் சினமன் காடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வாறியப்பொல பகுதியைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.