மீசாலை ஏ 9 வீதியில் இருவர் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டுச் சுவருடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்தனர்.
நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில் உடுவில் மேற்கு மானிப்பாயைச் சேர்ந்த தனநாயகம் தனப்பிரகாஸ் (25) என்பவரே உயிரிழந்தவராவார்.
சுன்னாகம் தெற்கு மானிப்பாயைச் சேர்ந்த சதாசிவம் சர்வானந்தன் (31), சாவகச்சேரி வடக்கு மீசாலையைச் சேர்ந்த யோகராசா ஆரோக்கியநாதன் (39) ஆகியோர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த தனநாயகம் தனப்பிரகாஸ் கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.






