100 வருடங்கள் பழமை வாய்ந்த வாளை விற்பனை செய்ய முயன்ற நபர்கள் கைது!!

1024

100 வருடங்களுக்கு பழமை வாய்ந்ததாக நம்பப்படும் புரதான வாள் ஒன்றினை விற்பனை செய்ய முயன்ற 3 சந்தேக நபர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா பிரதேசத்தில் குறிப்பிட்ட ஒரு வீடு ஒன்றில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதாக நம்பப்படும் புரதான வாள் ஒன்றினை (வெள்ளி மற்றும் பித்தளையாலும் கலந்து செய்யப்பட்ட வாள்) சுமார் 36 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்படுகையில் குறித்த சந்தேக நபர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சந்தேக நபர்களை நேற்று ஹட்டன் பொலிஸாரால் இரவு 7 மணியளவில் ஹட்டன் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குறித்த வாளினை விற்பனை செய்யப் போவதாக இரகசிய தகவலை அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவில் ஆடையில் அவர்களுடன் வியாபாரி ஒருவரை போல குறித்த இடத்திற்கு சென்று பேரம்பேசி வாளினை கொள்வனவு செய்வது போல நடித்து மேற்படி சந்தேக நபர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இருவர் டிக்கோயா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்களையும் தோண்டி எடுக்கப்பட்ட வாளினையும் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

V1 V2 V3 V4