ஆறு மாத குழந்தையை 30 ஆயிரம் ரூபாவுக்கு விற்ற தாய்!!

913

Baby

ஆறு மாத குழந்தையை விற்பனை செய்த தாயொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சபுகஸ்கந்த, ஹங்வெல்ல மிதுன் உயன என்ற பிரதேசத்தில் நடந்துள்ளது.

குழந்தையின் தாய், குழந்தையை 30 ஆயிரம் ரூபாவுக்கு மற்றுமொரு பெண்ணிடம் விற்பனை செய்துள்ளார். குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய மாகொல பிரதேசத்தை சேர்ந்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.