15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது!!

586

Abuse

பொகவந்தலாவை – பொகவான தோட்டத்தில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும், 24 வயது இளைஞன் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோக சம்பவம் கடந்த 02ம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து பொதுமக்களால் 1919 என்ற சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகப்பு அதிகார சபைக்கு வழங்கபட்ட தகவலை அடுத்து, பொகவந்தலாவை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யபட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சிறுமிக்கும் சந்தேகநபரான 24 வயது இளைஞருக்கும் காதல் உறவு இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை பாதிக்கபட்ட சிறுமி மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக நாவலபிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளார். சந்தேகநபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.