
வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி இளம் யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 44 வயதான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்கிஸ்சை பொலிஸார் இந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். மாத்தறை வித்தானந்தெனி பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
யுவதிக்கு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறியுள்ள நபர், கல்கிஸ்சை பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





