இலங்கையில் 2 லட்சம் பாடசாலை பிள்ளைகள் பெற்றோர் இன்றி வாழ்கின்றனர்!!

1131

School

இலங்கையில் சுமார் 2 லட்சத்து ஐயாயிரம் பாடசாலை சிறுவர்கள் பெற்றோர் இன்றி வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுகாதார கல்வி பேரவையின் பணிப்பாளர் நீலாமணி ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள 4.1 மில்லியன் பாடசாலை சிறுவர்களுக்கு மத்தியிலேயே இந்த 2லட்சத்து ஐயாயிரம் பேர் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச இளைஞர் தினம் ஓகஸ்ட் 12ம் திகதி வருவதை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் நீலாமணி இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெரும்பாலான பெற்றோர் குறைந்த வருமானத்தை பெறுவதன் காரணமாக தமது பிள்ளைகளை பராமரிக்க முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.