இந்தியாவில் இலங்கை அகதி தூக்கிட்டு தற்கொலை!!

298

sucide

இந்தியாவில் தனியார் மில்லில் சாரதியாக பணியாற்றி வந்த இலங்கை அகதி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இலங்கையில் இருந்து அகதியாக கோவை வந்தவர் கார்த்திக், சவுரிபாளையம் வேளாங்கண்ணி நகரில் விஜயகுமார் என்பவர் வீட்டில் வசித்து வந்தார்.

ராதிகா என்ற பெண்ணை கார்த்திக் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கோவையில் உள்ள தனியார் மில்லில் சாரதியாகபணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திக், மின் விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.