யாழில் தயையும் மகளையும் வாளால் வெட்டிய கொள்ளையர்கள்!!

575

Vaal

யாழ். கச்சாய் தெற்கு பகுதியில் அமைந்துள்ள வர்த்தகர் ஒருவரின் வீடொன்றில் புகுந்த கொள்ளையர்கள் தாயையும் மகளையும் கத்தியால் வெட்டி காயப்படுத்திவிட்டு பணம், நகை என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

நேற்று நள்ளிரவு குறித்த வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் வர்த்தகரைக் கட்டிவைத்து வீட்டிலுள்ள பொருட்களைக் கொள்ளையிட்டுள்ளனர்.

இதனை அங்கிருந்த தாயும் மகளும் அவதானித்ததும் கூச்சலிட்டுக் கத்தியுள்ளனர். அவர்கள் இருவரையும் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய கொள்ளையர்கள் நகை, பணம் என்பவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் கச்சாய் தெற்கைச் சேர்ந்த குமாராசாமி சிவபாக்க்கியம் (55) அவரது மகளான குமாராசாமி நிதர்சினி (22) ஆகியோர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.