யாழ்.மணிக்கூட்டு சுற்று வட்டத்தில் இன்று தமிழ் மன்னர்களது உருவச்சிலைகள் திறந்து வைக்கப்படவுள்ள நிலையில் அதன் முன்னேற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.
குறித்த பகுதிக்கு நேற்று (09.08) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் மேற்படி விடயம் தொடர்பில் ஆராய்ந்தார். இதன்போது இன்று பண்டாரவன்னியன், எல்லாளன், பரராஜசேகரன் ஆகிய மன்னர்களது சிலைகளும் திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், அதன் இறுதிக்கட்டப் பணிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன் ஏனைய ஏற்பாடுகள் தொடர்பிலும் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, வடமாகாண கல்வி அபிவிருத்திக் குழுத் தலைவர் இரா. செல்வவடிவேல் ஆகியோரும் உடனிருந்தனர்.







