தந்தையும் மகனும் பரிதாபமாக அடித்துக் கொலை!!

663

Murder

மீகஹதென்ன, ஹேன்யாய பிரதேசத்தில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று (11.08) இரவு இவர்களது வீட்டுக்குள் புகுந்த இனந் தெரியாத நபர்கள் தாக்கி கொலை செய்துள்ளனர்.

வீட்டிலிருந்த தந்தையும் மகனும் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீகஹதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர். 74 மற்றும் 42 வயதுடைய நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை காயமடைந்த மற்றுமொரு நபர் களுத்துறை, நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.