யாழில் இருந்து கொழும்பு சென்ற பேரூந்து மீது முகமாலையில் கல்வீச்சுத் தாக்குதல்!!

576

Bus

யாழ்ப்பாணத்திலிருந்த கொழும்பிற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் பயணிகள் பேரூந்தின் மீது முகமாலையில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு நடந்த தாக்குதலில் நான்கு பயணிகள் காயமடைந்துள்ளனர். இவர்களில் மோசமாக காயமடைந்த கன்னியாஸ்திரி ஒருவர், அம்புலன்ஸ் மூலம் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 10.20 மணியளவில் இந்த தாக்குதல் நடந்தது. சற்று பருமனான கற்களை கொண்டு ஜன்னல் கண்ணாடிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் பேரூந்தில் பெரும் கூக்குரல்கள் எழுந்தன. எனினும் சாரதி விரைவாக அந்த பகுதியை விட்டு பேரூந்தை நகர்த்திச் சென்று விட்டார்.

காயமடைந்தவர்கள் பெரும்பாலும் தலையிலேயே காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு செல்லும் பேரூந்துகள் மதவாச்சி பகுதியில் பல சந்தர்ப்பங்களில் தாக்கப்பட்ட நிலையில், தற்போது முகமாலையிலும் தாக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.