வவுனியாவில் வீட்டு வளாகத்தில் 09 அடி நீளமான முதலை மீட்பு!!

2025

வவுனியா – கொக்குவெளி பகுதியில் வீட்டில் இருந்து 09 அடி நீளமான முதலை ஒன்று வனஜீவராசிகள் திணைக்களத்தால் மீட்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் குறித்த வீட்டிற்கு பின்புறமுள்ள தோட்டப்பகுதியில் முதலை ஒன்று உள்ளதை வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.

அதனை துரத்துவதற்கு முற்பட்ட போது குறித்த காணியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட கிணற்றில் முதலை வீழ்ந்துள்ளது. இதனையடுத்து அவரால் வனயீவராசிகள் வனஜீவராசிகள் திணைக்களதிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்றையதினம் குறித்த பகுதிக்கு சென்ற அதிகாரிகள் கிணற்றில் இருந்து குறித்த முதலையை பிடித்துச்சென்றனர்.