வவுனியாவில் இருந்து நல்லூர் கந்தன் ஆலயத்தை நோக்கி பாதயாத்திரை!!

480

வவுனியா, வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து நான்காவது வருடமாக நல்லூர் கந்தன் ஆலயத்தின் உற்சவகால பாதயாத்திரை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியது.

வவுனியா, வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் சாமி அம்மா தலைமையில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் பாதயாத்திரையை ஆரம்பித்தனர்.

எதிர்வரும் 24ஆம் திகதி நல்லூர் கந்தன் ஆலய தேர்த்திருவிழா அன்று இவர்கள் தமது பாதயாத்திரையை நிறைவுசெய்யவுள்ளனர். யாத்திரையை ஆரம்பித்துள்ள இவர்கள் ஏ 9 வீதியில் உள்ள ஆலயங்களைத் தரிசித்து தங்கிச் செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதுடன் அங்கிருந்தும் பலர் இந்த பாதயாத்திரையுடன் இணையவுள்ளனர்.

இன்றைய இந்த ஆரம்ப நிகழ்வில் வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் நித்தியானந்தம், வவுனியா அந்தணர் ஒன்றிய செயலாளர் பிரபாகரக்குருக்கள் உள்ளிட்ட அந்தணப் பெருமக்கள், தமிழருவி த.சிவகுமார், சைவமணி சண்முகம் உள்ளிட்ட பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

30 31