முகத்தில் விதவிதமான கதாபாத்திரங்களுடன் வினோத சாதனை படைத்த பெண்!!

460

லண்டனை சேர்ந்த 25 வயதான பெண் மேக்கப் கலைஞர் ஒருவர், முகத்தில் விதவிதமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை வரைந்து அசத்தியுள்ளார்.

லண்டனை சேர்ந்த பெண் மேக்கப் கலைஞர் லாரா ஜென்கின்சன் என்பவர் நாடகங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு மேக்கப் போடும் ஒப்பனை கலைஞராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு உடலில் விதவிதமான கார்ட்டூன்களை வரைவது பொழுது போக்கு. சமீபத்தில் மறைந்த கார்ட்டூன் ஓவியர் ரொபின் வில்லியம்ஸுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை முகத்தில் வரைய முடிவு செய்துள்ளார்.

அதே போல் பாப்பாய், குக்கி மான்ஸ்டர், கூபி, ஷரக், பக்ஸ் பன்னி மற்றும் தாஸ்மேனிய பூதம் போன்ற கதாபாத்திரங்களை தனது முகத்தில் ஒவ்வொன்றாக வரைந்து காட்சி தந்தார்.

தனது அசத்தலான கார்ட்டூன் முகங்களை படமாக எடுத்து தனது வலைதள பக்கத்திலும் லாரா வெளியிட்டுள்ளார். இதுகுறித்து லாரா கூறுகையில், ஒவ்வொரு வாரமும் எனது முகத்தில் ஓவியர் ரொபினின் கார்ட்டூன்களை பெயின்டிங் செய்யும்போது, ஒருவித சிலிர்ப்பு ஏற்பட்டது.

அப்போதுதான் அந்தந்த கதாபாத்திரங்களின் தனித்தன்மையை உணரத் தொடங்கினேன். கார்ட்டூன் கதாபாத்திரங்களை பொறுமையாக வரைந்ததன் மூலம், ஓவியர் ரொபினுக்கு செய்யும் மரியாதை செய்ததாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

F1 F2 F3 F4 F5