இறப்பில் இருந்து மீண்டு வந்த வீரப் பெண் : நெஞ்சை உலுக்கும் கதை!!

381

Lady

பிரித்தானியாவில் ராணுவத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் விபத்தில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளில் இருந்து தற்போது மீண்டு வந்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானியா இராணுவத்தை சேர்ந்த ஹன்னா கம்பல் (30) கடந்த 2007ம் ஆண்டு இராக்கில் பிரித்தானியா தளத்தை பாதுகாக்கும் பொறுப்பில் இருந்துள்ளார். அப்போது பசேரா (Basra) கட்டிடத்தில் பீரங்கி வண்டியுடன் பணியில் இருந்தபோது ஹன்னா பெரும் காயங்களுடன் அதிர்ஷடவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இந்த விபத்தில் தனது கண், கை மற்றும் இடது காலை இழந்ததோடு, வயிறு மற்றும் கருப்பையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக ஹன்னாவிற்கு பிரித்தானிய அரசிடமிருந்து 3,80,000 பவுண்டுகள் இழப்பீடு தொகை கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் உயிர் பிழைப்பதே கடினம் என பலர் எண்ணியபோது, தற்போது ஹன்னா மீண்டுவந்த நிலை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என ஹன்னா நிரூபித்துள்ளார். இதனால் தன்னை பழைய நிலைமைக்கு மாற்ற முடியவில்லை என்றாலும் சராசரி பெண்ணை போல் மாறியுள்ளது மிகவும் அதிசயமே.

இவர் தனது மறுவாழ்வு காலத்தில் கூடிய 72 கிலோ எடையைக் குறைக்க காஸ்ட்ரிக் பாண்ட் (Gastric Band) சிகிச்சை செய்து பழைய உடல் எடைக்கு திரும்பியுள்ளார்.

மேலும் சேதமடைந்த தலை முடி, இழந்த காலிற்கு பதிலாக செயற்கை கால், தானமாக பெற்ற கண் மற்றும் தளும்புகளை மறைக்க என மொத்தம் 52,500 பவுண்டுகள் செலவு செய்து சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

தற்போது 10 வயது பெண்ணிற்கு தாயாக இருக்கும் ஹன்னாவிற்கு கர்ப்பப்பையில் ஏற்பட்ட காயத்தால் மறுபடியும் குழந்தை பெற முடியாது என மருத்துவர்கள் மறுத்த நிலையில், தற்போது 6 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது முறையாக குழந்தை பெற்றுள்ளார்.

ஹன்னா இதுபற்றி கூறுகையில், எனக்கு அதிசயம் நடந்துள்ளது, பெண்கள் தங்களின் அழகில் திருப்தி அடைவது மிகவும் கடினம் என்றும் ஆனால் தான் தற்போது மிகவும் அழகாக இருப்பதாக நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது பிரித்தானியாவில் சில பெண்கள் இவரை முன் உதாரணமாக வைத்து வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.