பாலியல் பலாத்காரத்தை தடுக்கும் புதிய நகப்பூச்சு அறிமுகம்!!

287

Nailpolish

பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதை தவிர்க்க புதிய நகப்பூச்சு ஒன்று அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தை அன்கேஷ் மதன் (Ankesh Madan), ஸ்டீபன் கிரே (Stephen Gray) டைலர் கான்பிரீ மலோனி (Tyler Confrey-Maloney) மற்றும் டாஸோ வான் (Tasso Von) என்ற 4 மாணவர்கள் டேட்டிங்கில் நிகழும் பலாத்காரத்தை தடுக்க ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

பொருட்களின் அறிவியல் மற்றும் பொறியியல் (Materials Science & Engineering) பயின்ற இந்த மாணவர்கள் புதிய வகை நகப்பூச்சு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்ட மதன் கூறியதாவது, டேட்டிங் செல்லும் பெண்கள் தங்களுக்கு அளிக்கப்படும் பானத்தை நகப்பூச்சு போட்டுள்ள விரலால் கலக்க வேண்டும் என்றும் அப்படி செய்யும்போது அந்த பானத்தில் மயக்க மருந்து கலக்கப்பட்டிருந்தால் நகப்பூச்சின் நிறம் மாறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதன் மூலம் பலாத்காரத்தை தவிர்ப்பது மட்டுமல்லாமல் காமுகர்களின் வலையில் இருந்து பெண்கள் தப்புவது எளிதாகும் என கூறப்படுகிறது.