காசாவிற்கு குரல் கொடுப்போம் : தீயாய் பரவி வரும் ரப்பில் பக்கட் சலன்ஞ்!!

265

காசா பிரச்சனை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக “ரப்பில் பக்கட் சலன்ஞ்” என்ற சவால் இணையதளத்தில் வேகமாய் பரவி வருகிறது.

ரப்பில் (Rubble) என்பதற்கு இடிபாடுகள் என்று பொருள். இந்த சவாலில் பங்கேற்பவர்கள் ஐஸ் தண்ணீருக்கு பதிலாக ஒரு பக்கெட்டில், புழுதி, மணல் மற்றும் கற்களை சேர்த்து தங்கள் தலையில் கொட்டிக் கொள்ள வேண்டும்.

இஸ்ரேல்-பாலஸ்தீன் இடையே கடும் போர் நடைபெற்று வருவதால், பாலஸ்தீனத்தில் தலையில் கொட்டிக்கொள்ள ஐஸ் தண்ணீர் கிடையாது.

அங்கு இருப்பதெல்லாம் இடிபாடுகளின் கற்களும் மண்ணும் தான். எனவே இதை உணர்த்தும் வகையில் பலரும் ரப்பில் பக்கெட்டை தலையில் கவிழ்த்துக்கொள்கின்றனர்.

மேசம் யூசப் (Maysam Yusef) எனும் கல்லூரி மாணவர் தொடக்கி வைத்த இந்த சவால், தற்போது உலகெங்கும் பலரால் செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை ரப்பில் பக்கெட் சவாலை செய்தவர்கள், அதை படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் காசாவை சேர்ந்த ஐமான் அலூல் (Ayman Aloul) என்ற பத்திரிகையாளர், இடிபாடுகளின் நடுவே நின்று, ரப்பில் பக்கெட்டை தலையில் கவிழ்த்துக்கொண்டு வெளியிட்ட காணொளி சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

rubble_bucket_002 rubble_bucket_003 rubble_bucket_004 rubble_bucket_005