இலங்கைக்கு வந்த மனைவி பிள்ளைகள் ; ஐரோப்பாவில் கணவனுக்கு நேர்ந்த துயரம்!!

431

மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கைக்கு வந்த நிலையில், இத்தாலியின் பெசாரோவில் நடந்த வீதி விபத்தில் இலங்கையர் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 48 வயதான அஞ்சு ஜெயசிங்க எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி அதிகாலை 5.20 மணியளவில், தனது பணியிடத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, ​​வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அதே வழியில் பயணித்த குப்பை அகற்கும் தொழிலாளர்கள் குழு, இலங்கையர் காயங்களுடன் வீதியோரத்தில் கிடப்பதைக் கண்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இலங்கையர் சுமார் 15 ஆண்டுகளாக இத்தாலியில் பணிபுரிந்து வருவதாக கூறப்படும் நிலையில், விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.