கோர விபத்தில் பரிதாபமாக பலியான இளைஞன்!!

332

சியம்பலாண்டுவ – எத்திமலை பிரதான வீதியின் முதலாம் மைல் கல் பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று சொகுசு ஜீப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சியம்பலாண்டுவ, ஐந்தாம் மைல் கல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சியம்பலாண்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.