வெளிநாடொன்றில் இரு தொடருந்துகள் மோதி பயங்கர விபத்து : 14 பேர் உயிரிழப்பு!!

183

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே இரண்டு தொடருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடருந்து இடிபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை அதிகரிக்கும்

பெகாசி திமூர் தொடருந்து நிலையத்தில், நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் தொடருந்து மீது மற்றொரு விரைவு தொடருந்து மோதி குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மேலும் படுகாயமடைந்த 80இற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.